jothida thendral ASTRO ASHOKJEE

Name

Email *

Message *

Monday, December 14, 2020

சுக்கிரன்+ராகு, புதன்+சுக்கிரன்+ராகு,செவ்வாய்+சுக்கிரன்+ராகு

 சுக்கிரன்+ராகு


செவ்வாய்+சுக்கிரன்+ராகு


புதன்+சுக்கிரன்+ராகு


சுக்கிரன்+சூரியன்+புதன்+ராகு


சூரியன்+ராகு


புதன்+ராகு..  


இணைவு  எனில்


ஜாதகரும்....அவரது பரம்பரையும்


சிற்றின்பம்... காதல்...காமமும்.. கலந்த கலவையில் பிறவி எடுத்தவர்கள்.

அதீக ஈடுபாடு கொண்டவர்கள்.. 

இவர்கள் பிறவியே இதற்காக தான்...


நன்றி


மிதுனத்தில் சுக்கிரன் இருந்தால் மனைவியுடன் ஜாதகம் மிதுனத்தில் செவ்வாய் இருக்க வேண்டும்

 நண்பர்களே.. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு உள்ளார் அதே இடத்தில் உங்கள் மனைவியின் ஜாதகம் செவ்வாய் இருந்தால் நல்ல பொருத்தம்... உதாரணத்திற்கு உங்கள் ஜாதகத்தில் மிதுனத்தில் சுக்கிரன் இருந்தால் மனைவியுடன் ஜாதகம் மிதுனத்தில் செவ்வாய் இருக்க வேண்டும் நல்ல பொருத்தம..🙏+91 6379140429🙏

புதன் ராகு சேர்ந்திருந்தால் அல்லது புதன் எட்டில் இருந்தாலும்

 புதன் ராகு சேர்ந்திருந்தால் அல்லது புதன் எட்டில் இருந்தாலும் நரம்புத் தளர்ச்சி உடல் நடுக்கம் நடுக்குவாதம் மனபதட்டம்(Anxiety,Hand tremor,parkinson...) இருப்பதற்கு வாய்ப்புள்ளது..


📌எட்டில் புதன் இருந்தால் தாய் மாமன் இருக்க மாட்டார் அப்படியே இருந்தாலும் ஒரு சதவீதம் அளவு கூட அவரால் இந்த ஜாதகருக்கு உபயோகம் இல்லை என்பது உத்தரவாதம்


📌எட்டில் புதன் இருக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் உடல் எடை கூடவே கூடாது பசி இருந்துகொண்டே இருக்கும்.


 📌( சந்திரனுடன் புதன் )சேர்ந்து இருக்கும் பொழுது மனக்குழப்பமும், மனபயம், திட்டமிடலில் சரி இல்லாதது, தான் நினைப்பது சரி என்றும் மற்றவர்கள் நினைப்பது தவறு என்ற ஒரு மனநிலை உண்டுபண்ணி ஜாதகரை அடுத்த கட்டத்திற்கு செயல்பட முடியாத ஒரு சூழ்நிலையில் கொண்டுபோய்விடும். 


📌இந்த சந்திரன் புதன் சேர்க்கை உள்ள ஜாதகர்கள் பேச்சில் கெட்டிக்காரர்கள். பேசியே காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். இவர்கள் பேசினாள் தேன் சொட்ட சொட்ட இனிக்க இனிக்க பேசக்கூடியவர்கள்.



📌உங்கள் ஜாதகத்தை  தொலைபேசி வழியாக அலசி ஆராய தொடர்பு கொள்ளுங்கள் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் சொல்லப்படும்.


🙏ஜோதிட தென்றல்

Astro Ashokjee

+91 6379140429

+91 7550238450🙏

Monday, November 23, 2020

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்-




 உத்திரட்டாதி நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் பேச்சில் வேகம் இருந்தாலும் எப்பொழுதும் உண்மையே பேசக் கூடியவர்கள். சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றுவார்கள். மிகுந்த சாமர்த்திய சாலி. வெற்றிலை போடுவதிலும் அடிக்கடி பயணம் மேற்கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கும். மனதில் எப்பொழுதும் ஒரு தேடல் இருக்கும். யாருக்காகவும் போலியான வாழ்க்கை வாழ மாட்டார்கள். சாதுவான குணமிருந்தாலும் முன் கோபம் வந்தால் முரட்டு தனமும் வெளிப்படும். நட்பு வட்டாரங்கள் அதிகம் இருந்தாலும் யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார்கள். கல்வி சுமாராகத் தானிருக்கும். பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவேகமும் நிறைந்தவர்கள். ஆழமாக யோசித்து செயல் படுவதால் தொட்டதெல்லாம் துலங்கும். பேச்சை விட செயலில் தான்  ஈடுபாடு இருக்கும். நீதி, நேர்மையுடன் வாழ்வார்கள். எதிலும் நடு நிலைமையுடனிருப்பார்கள். அகன்ற மார்பும் காதுகளும் இவர்களுக்கு அழகை சேர்க்கும். தன்னுடைய கடினமான உழைப்பால் முன்னேறி உயர்வான நிலையை அடைந்து சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.


தொழில்;
     
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உண்மையே பேசி பல நட்புகளைப் பெறுவர். தர்ம முறையில் பணம் சம்பாதிப்பார்கள். சற்று பிடிவாத குணமிருந்தாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். கதை கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சட்டம் பயிலுபவர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும் வானவியல், ஜோதிடம், மருத்துவம் வங்கிப் பணி போன்றவற்றிலும் பணி புரிவார்கள், பள்ளி கல்லூரி, கன்ஸ்ட்ரக்ஷன், சிட்பண்ட்ஸ், பதிப்பகம் போன்றவற்றையும் நடத்துவார்கள் 27 வயது முதல் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். 51 வயதில் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு நாட்டையே ஆளக் கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகத்தை பெற்றவர்கள்.

பொருந்தாத நட்சத்திரங்கள்
      பரணி, பூசம், அனுஷம், பூராடம், பூரம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.
-


ராகு சூரியன் சேர்க்கை ராகு சந்திரன் சேர்க்கை ராகு, சனி சேர்க்கை





 ராகு சூரியன் சேர்க்கை பெற்றால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவினர்களிடம் பகை, எந்தபாவத்தில் இருக்கிறார்களோ அந்த பாவத்தை பாதிக்கும் அமைப்பு உண்டாகும். அதுவும் 8ல் அமையப் பெற்றால் இருதய கோளாறு கண்களில் பாதிப்பு, எலும்புருக்கி நோய், உஷ்ண நோய்கள் உண்டாகும்.

ராகு சந்திரன் சேர்க்கை பெற்றால் மனக் குழப்பம், முன்கோபம், முரண்பட்ட பழக்க வழக்கங்கள், தாய்க்கு உடம்பு பாதிப்பு உண்டாகும்.
ராகு செவ்வாய் சேர்க்கை பெற்று ஒரு ஆண் ஜாதகத்தில் முரட்டுத் தனம், பிடிவாத குணம், விளையாட்டுத் தனம் எதிலும் வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படும் நிலை உண்டாகும். பலமிழந்திருந்தால் கடன் தொல்லை, விபத்து, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை மனப்பான்மை எல்லாம் உண்டாகும். பெண்களுக்கு செவ்வாய் ராகு சேர்க்கை பெற்றால் விதவை, முறை தவறும் சூழ்நிலை உண்டாகும்.

ராகு, சனி சேர்க்கை பெற்றால் வாழ்க்கை என்பது, போராட்டகரமானதாக இருக்கும். முதுமையான தோற்றம், உடல்நிலை பாதிப்பு, தாமத திருமணம், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நிலை முரட்டுத்தனமான குணம் உண்டாகும்.
கேது பகவான் சூரியன் சேர்க்கைப் பெற்று அமையப் பெற்றால் உஷ்ண நோய்கள், தந்தைக்கு கண்டம், தந்தை வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

Wednesday, November 18, 2020

ஜாதகம் விளக்கம் எதிர்கால பலன் தொலைபேசி வழியாக +91 6379140429-astrologer tambaram

 1-8ம் இடத்தோடு சனி+செவ்வாய் சம்பந்தப்பட்டாள் ஆழமான குழி/கிணறுகளில் கவணம் தேவை: 

2-இருக்கும் பாவத்தில் இன்னும் வேண்டும் என்பார் ராகு இருப்பதே போதும் என்பார் கேது இதற்கு மேல் இல்லை என்பார் சனி: 

3-குழந்தைக்கு 5ம் இடத்தையும் எதிர்காலத்தில்  குழந்தைகளுடனான உறவுக்கு 9ம் இடத்தை பார்க்கவும்.

4-தொழிலுக்கு 10ம் இடத்தையும் தொழில் முன்னேற்றத்திற்கு 7ம் இடத்தை பார்க்க வேண்டும்.

5-7ம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்!  என் புருஷன்/பொண்டாட்டி தான் எனக்கு மட்டும் தான்!!




குரு பெயர்ச்சியின் உண்மையும் அதன் தன்மை குரு பெயர்ச்சி பலன் 2020-2021

 




பாசிட்டிவாவா குருபெயர்ச்சி பலன் சொல்ரேன்னு ஏங்கய்யா 12 ராசிக்கும் குரு பெயர்ச்சி நல்லது செய்யும்னு பொய்ய சொல்றீங்க?


பிறந்த ராசிக்கு 2,5,7,9,11 ல் குருவரும்போது எல்லா விதத்திலும் குரு நன்மையை செய்வார். இதற்கு முக்கியமாக தசாபுக்தி ஒத்துழைக்க வேண்டும். அதாவது நாம் ஒன்றைக்கேட்டாலும் கொடுக்க மனம் வரவேண்டும் அல்லவா?


தசா,புக்தி பலன்கள் 75 சதவீதமும் குரு,சனி,ராகு பெயர்ச்சி போன்ற கோச்சார பலன்கள் 25 சதவீதமும் கலந்ததுதான் வாழ்க்கை. 


தசாபுக்தியும் கோச்சாரமும் நல்லா இருந்தா வாழ்க்கை ஜோர். ஏதாவது ஒன்று சறுக்கினாலும் நடுத்தரமான கலப்பு பலன்தான் நடக்கும். 


தசாபுக்தியும் கோச்சாரமும் சரியில்லையென்றால் கொஞ்சம் சிரம்ப்பட வேண்டியதுதான். இதான் விதி.


அதன்படி ரிசபம்,கடகம்,கன்னி,மீனராசிக்கு குருபெயர்ச்சி நல்லாருக்கு. தனுசு ராசிக்கு இன்னும் ஏழரை சனி முடிவிற்கு வராத காரணத்தால் மழைவிட்டாலும் தூவாணம் விடவில்லை என்ற கதைதான்.


மற்ற ராசிக்காரர்களுக்கு ஒரு வருடம் பொருமையாக இருங்க. அல்லது உங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல தசாபுக்தி நடக்குதான்னு பார்த்திட்டு அதற்கு காத்திருங்க.


எல்லா விதத்திலும்  நல்ல பலன் என்றால் என்னவென்று கேட்பீர்கள். எதற்கு காத்திருக்கிறீர்களோ அதற்கு   வாய்ப்பு அதிகமாக உண்டாகும். இதற்கு தசாபுக்தியும் அவசியம் என்பதை மறந்து விடக்கூடாது.


அதாவது வருடாவருடம் குருபெயர்ந்து குருபலன் வந்தாலும் தசாபுக்தி ஒத்துழைக்கும் வருடந்தானே திருமணம் நடக்கும் என்ற அடிப்படை இதில் அடங்கியுள்ளது.

Tuesday, November 17, 2020

ASTROLOGER TAMBARAM CHENNAI-MERCURY PLANET - (புதன் ராகு) சேர்க்கை-புதன் ஆதிக்கம் கொண்ட நபர்கள்


 


1-புதன் ஆதிக்கம் கொண்ட நபர்கள் தனது அறிவாற்றல் பேச்சால் அனைவரையும் கவரக்கூடிய நபர்களாக இருப்பார்கள்

Logical and analytical thinking கொண்டவர்கள் கணக்குப் போட்டு காரியத்தை செய்வதில் கில்லாடிகள் கலகலப்பாகவும் நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடியவர்  தன் பேச்சினாலே எளிதில் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள் பச்சோந்தி குணம் கொண்டவர்கள் இரட்டை மைய தன்மை அதிகம் கொண்டவர்கள் சற்று நம்பகத்தன்மை குறைந்தவர்கள் ஆளுக்கு தகுந்தாற்போல் பேசி தன் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் தனது புத்திசாலித்தனத்தை மூலதனமாகக் கொண்டு தப்பித்துக் கொள்வார்கள் பொதுவாக புதன் ஆதிக்கம் கொண்ட நபர்கள் எல்லோரும் விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள்


2- உங்கள் ஜாதகத்தில் (புதன் ராகு) சேர்க்கை , புதன் ராகுவின் நட்சத்திரத்தில் இருந்தாலும். ராகு புதன் நட்சத்திரத்தில் இருந்தாலும். காற்றில் கதை எழுதுவது.. கற்பனையில் கோட்டையை கட்டி அதில் வாழ்வது.. இவர்களே இவர்கள் பல மொழிகள் தெரிந்த வித்தகர்கள்.. அதிகம் செலவு செய்ய தூண்டுபவர்கள். பொய்யை உண்மை போல் பேசும் உத்தமர்கள் ஒருதலைக் காதல் நாயகர்கள் இவர்களே. குரு பார்க்க  பலன்களும் மாறுபடும் 🐊

🙏ஜோதிட தென்றல்

Astro Ashokjee

+91 6379140429

+91 7550238450🙏

உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன்-ASTROLOGY DETAILS CALL 6379140429


 


1-நண்பர்களே: உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் இருந்தாலும் அல்லது லக்னத்தை சூரியன் பார்த்தாலும் உங்களிடம் ஒரு ஆளுமை தன்மை இருக்கும்.. 

தான் பெரியவன் என்ற தோரணை. அகங்காரம் ஆசை மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.


 இவர்கள் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறலாம் குரு பார்த்தால் வெற்றி நிச்சயம் ஆனால் சூரியனுடன் ராகு அல்லது கேது சேர்க்கை பெறக்கூடாது


2-நண்பர்களே: நீங்கள் மீன ராசி மீன லக்னத்தில் பிறந்திருந்தால்( நீர் ராசி) மிக நல்லநேரம் வரத் துவங்கிவிட்டது குரு பெயர்ச்சி ராகு பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி அனைத்து உங்களுக்கு சாதகமாக உள்ளது...


 📌உங்கள் தொழிலில் கொடிகட்டி பறக்க வேலையில் உயர்வான பதவி செல்ல குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் இவர்களுக்கு பிறந்த கால ஜாதகத்தில் கன்னிராசியில் செவ்வாய் சனி சேர்ந்திருந்தால் எவ்வளவு சம்பாதித்தாலும் அது உங்களுக்கு கையில் தங்காது..


 📌ஆனால் இப்போ இருக்கும் சூழ்நிலையில் அனைத்து கிரகங்களும் சாதகமாக உள்ளதால் நீங்கள் மனக்கோட்டை கட்டிய அனைத்து செயல்களும் நன்றாகவே இருக்கும் காலம் உங்களுக்கு கனிந்துள்ளது அதில் உள்ள பழங்களை பறிப்பதற்கு நீங்கள் உங்களை தயார் செய்து 

கொள்ள வேண்டும்.


📌சகோதர உறவு மேம்படும்( ராகு மூன்றாமிடத்தில் உள்ளது) திருமணம் உங்கள் விருப்பப்படி நடக்கும் வேலை மாற்றம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி இருக்கும். அரசியலில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் மற்றும் அரசியலில் வெற்றி பெற மிக அருமையான வாய்ப்புகள்...


3- நீங்கள் கும்ப ராசி OR கும்ப லக்னத்தில் பிறந்தவராக இருந்தாள் இவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் மூத்தவராக இருப்பார்... இது ஒரு ஆண் இலக்கணம் ஆன் ராசி மனோதைரியம் உடையவர்கள் கடவுள் பக்தி குறைவாக உள்ளவர்கள் இவர்கள் பேச்சை அனைவரும் கேட்க வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக இருக்கும்... தான் செய்யும் வேலையில் கெட்டிக்காரத்தனம் உடையவர்கள்... இந்த ராசிக்கு பாதகாதிபதி ராசி துலாம் ராசி


உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.-ASTROLOGY

 இந்தப் பதிவைப் படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி பின் படியுங்கள் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்! (இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை*)

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.



நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.


உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.


ஒன்றை மட்டும் தெரிந்து கொள்.


ஒவ்வொரு மனிதனும்

தனித்தனி ஜென்மங்கள்.


அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.

அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே.அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .


அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.

அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.


இதுதான் வாழ்க்கையின் உண்மை.


அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.


அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்,

நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற

குழந்தைகளாக இருந்தாலும்,

பேரன் பேத்திகளாக இருந்தாலும்,

உறவுகளாக இருந்தாலும்,

அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா?


ஒதுங்கி நின்று வேடிக்கை பார்! பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.


அவர்களுக்கு அனுபவம் தான் குரு.

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.


செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார் ?,தன் குணம் என்ன ?,என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். 

எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.


நாம்வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம்.

அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது.

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.


நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும் ,தீமை வந்தாலும் ,உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.


இன்பமானாலும் துன்பமானாலும்

அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.

அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.


உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்


பெண்ணாக இருந்தாலும் ,ஆணாக இருந்தாலும் ,வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.


மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.


உன் கண்ணீரும் உன் கவலையும்

உன்னை பலவீனமாக காட்டிவிடும்.


அழுவதாலும் சோர்ந்து போவதாலும்

ஒன்றும் நடக்கப்போவதில்லை.

எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும்.


அழுது சுமப்பதை காட்டிலும்.

ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.


தைரியமும் தன்னம்பிக்கையும் தான் 

ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள்.


இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால்

 எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.


                 வாழ்க🙌வளமுடன்


                   (அன்பே🔥சிவம்)

சுக்கிரன்+ராகு, புதன்+சுக்கிரன்+ராகு,செவ்வாய்+சுக்கிரன்+ராகு

 சுக்கிரன்+ராகு செவ்வாய்+சுக்கிரன்+ராகு புதன்+சுக்கிரன்+ராகு சுக்கிரன்+சூரியன்+புதன்+ராகு சூரியன்+ராகு புதன்+ராகு..   இணைவு  எனில் ஜாதகரும்....