jothida thendral ASTRO ASHOKJEE

Name

Email *

Message *

Tuesday, November 17, 2020

ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளுங்கள் சிறந்த ஜோதிடர் தாம்பரம் பல்லாவரம் முடிச்சூர்-ASTRO ASHOKJEE





பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்.

அன்பு சொந்தங்களுக்கு என்னுடைய வணக்கங்கள் ..கிரக சேர்க்கையில் மிகவும் தீய சேர்க்கையாக கருதப்படுவது  சனி செவ்வாய் சேர்க்கை.

             ஒரு ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்ந்து இருப்பின் சுபர் சேர்க்கை அல்லது சுபர் பார்வை இல்லாமல் இருக்கும் சமயங்களில் சனியும் செவ்வாயும் அந்த பாவகத்தின் ஆதிபத்திய காரகத்துவங்களை சிதைத்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும் ..செவ்வாய் மிகவும் வேகமான ஒரு கிரகம் விவேகம் இல்லாதது ..முரட்டுத்தனம் பிடிவாதம் இரண்டும் இருக்கும் செவ்வாய் இடம் ..

                சனி சோம்பல் நயவஞ்சகம் பொய் பேசுதல் களவாடுதல். நம்பிக்கை துரோகம் இவற்றுக்கெல்லாம் காரகம் வகிப்பவர் சனி ..இருவரும் ஒரே கட்டத்தில் இணைந்திருந்து ஜென்ம பகை கிரக யுத்தம் அங்கே நடைபெறும்.

           சனி செவ்வாய் சேர்க்கை குரு நல்ல நிலையில் வலிமையான நிலையில் இருந்து பார்க்கும் பொழுது மட்டுமே இவர்கள் சுபத்துவம் அடைகிறார்கள் ..வளர்பிறைச் சந்திரன் அல்லது பௌர்ணமி சந்திரன் ஏழாம் பார்வையாக பார்க்கும்பொழுது. அங்கே சனியும் செவ்வாயும் ஏழாம் பார்வையாக சந்திரனையும் பார்க்கிறார்கள். அப்பொழுது சந்திரன் பங்க பட்டு விடுகிறார் என்றே சொல்ல வேண்டும் .


.அங்கே சனியின் பார்வை விழும் சந்திரன். சந்திரனின் ஆதிபத்திய காரகத்துவங்கள் பங்கப் பட்டு விடுகிறது ..இன்னும் சிலருடைய ஜாதகங்களில்  குருவும் வளர் பிறை சந்திரனும் அல்லது பவுர்ணமியை நெருங்கிக்கொண்டு இருக்கும் சந்திரன் இந்த சனி செவ்வாய் சேர்க்கை ஒருசேர பார்வையிடும் பொழுது. சனி மற்றும் செவ்வாயின் தீய காரகத்துவங்கள் முற்றிலுமாக வடிகட்டப்பட்டு சுபத்துவம் ஆன விஷயங்கள் ஜாதகருக்கு அந்த தசா காலங்களில் கிடைக்கிறது.

              சனி செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் ..பொதுவாகவே ரத்த தானம் செய்வது ரத்தத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது உடற்பயிற்சி மேற்கொள்வது தியானம் செய்வது. மனதையும் உடலையும் வலுப்படுத்தும் ..கீழ்நிலை உள்ள மக்கள் அல்லது தூய்மை பணியாளர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யும்பொழுது சனியின் தீய காரகத்துவங்கள் குறையும்.

    இது ஒரு பொதுவான விழிப்புணர்வுக்கான பதிவு யாரும் தங்களுடைய சுய ஜாதகத்தை பதிவிட்டு கேள்விகள் கேட்க வேண்டாம் ..சுய ஜாதக ஆலோசனை பெறுவதற்கு கட்டணம் உண்டு.


நண்பர்களே: நீங்கள் மீன ராசி மீன லக்னத்தில் பிறந்திருந்தால்( நீர் ராசி) மிக நல்லநேரம் வரத் துவங்கிவிட்டது குரு பெயர்ச்சி ராகு பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி அனைத்து உங்களுக்கு சாதகமாக உள்ளது...


 📌உங்கள் தொழிலில் கொடிகட்டி பறக்க வேலையில் உயர்வான பதவி செல்ல குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் இவர்களுக்கு பிறந்த கால ஜாதகத்தில் கன்னிராசியில் செவ்வாய் சனி சேர்ந்திருந்தால் எவ்வளவு சம்பாதித்தாலும் அது உங்களுக்கு கையில் தங்காது..


 📌ஆனால் இப்போ இருக்கும் சூழ்நிலையில் அனைத்து கிரகங்களும் சாதகமாக உள்ளதால் நீங்கள் மனக்கோட்டை கட்டிய அனைத்து செயல்களும் நன்றாகவே இருக்கும் காலம் உங்களுக்கு கனிந்துள்ளது அதில் உள்ள பழங்களை பறிப்பதற்கு நீங்கள் உங்களை தயார் செய்து 

கொள்ள வேண்டும்.


📌சகோதர உறவு மேம்படும்( ராகு மூன்றாமிடத்தில் உள்ளது) திருமணம் உங்கள் விருப்பப்படி நடக்கும் வேலை மாற்றம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி இருக்கும். அரசியலில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் மற்றும் அரசியலில் வெற்றி பெற மிக அருமையான வாய்ப்புகள்...




ஜோதிட தென்றல்

Astro Ashokjee

+91 6379140429

+91 7550238450

No comments:

Post a Comment

thanks
contact
Astro Ashokjee
+91 6379140429

சுக்கிரன்+ராகு, புதன்+சுக்கிரன்+ராகு,செவ்வாய்+சுக்கிரன்+ராகு

 சுக்கிரன்+ராகு செவ்வாய்+சுக்கிரன்+ராகு புதன்+சுக்கிரன்+ராகு சுக்கிரன்+சூரியன்+புதன்+ராகு சூரியன்+ராகு புதன்+ராகு..   இணைவு  எனில் ஜாதகரும்....